/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் நகர், புறநகரில் குடிநீர் வராமல் மக்கள் அவதி; காவிரி குழாய் சேதம்; வினியோகம் பாதிப்பு

UPDATED : மார் 08, 2025 05:46 AM
ADDED : மார் 08, 2025 03:30 AM

ராமநாதபுரம் : சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் மெயின் குழாய் சேதமடைந்துள்ளதால் ராமநாதபுரம் நகராட்சி, சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வராமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொய்வின்றி தினமும் வழங்க வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 65 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 2011ல் திருச்சி அருகே நங்கநல்லுார் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து 200 கி.மீ., குழாய் மூலம் ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
காவிரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் கீழ்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து நொச்சிவயல் ஊருணி, முகவை ஊருணி மேல்நிலைத் தொட்டி, லேத்தம்ஸ் மேல்நிலைத் தொட்டி, பஸ் ஸ்டாண்ட் மேல்நிலைத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு நகரில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக நகருக்கு வரும் காவிரி குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பு வைத்துள்ள குடிநீரை சில பகுதிகளுக்கு லாரியில் பெயரளவில் வினியோகம் செய்கின்றனர். இதனால் மக்கள் குடிநீரை குடம் ரூ.13 வரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருச்சியில் இருந்து வரும் பிரதான குழாய் திருப்பத்துாரில் சேதமடைந்துள்ளதை சீரமைக்கும் பணி நடக்கிறது. இன்று (நேற்று) முடிந்து விடும். நாளை (இன்று) முதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர்.