/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வாகன வசதியில்லாததால் சுணக்கம்
/
உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வாகன வசதியில்லாததால் சுணக்கம்
உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வாகன வசதியில்லாததால் சுணக்கம்
உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வாகன வசதியில்லாததால் சுணக்கம்
ADDED : செப் 03, 2024 04:49 AM
திருவாடானை : உணவு பாதுகாப்புத்துறை அலுவலருக்கு வாகன வசதி, உதவியாளர் இல்லாததால் உணவுப்பொருள் கலப்படத்தை கண்டறிவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம், கீழக்கரை, திருப்புல்லாணி, பரமக்குடி, போகலுார், நயினார்கோவில், கமுதி, முதுகுளத்துார் ஆகிய ஊர்களில் ஏழு உணவுபாதுகாப்புத்துறை அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு முறையான அலுவலகமோ, உதவியாளர்களோ, வாகன வசதியோ ஏற்படுத்தித் தரவில்லை.
ஒரு உணவுபாதுகாப்புத்துறை அலுவலர் 100 கிராமங்கள் வரை கண்காணிக்க வேண்டும். இதனால் உணவு கலப்படத்தை தடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைத்து உணவகங்களிலும் உணவு தரமாக உள்ளதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
பரிசோதனையில் தரமில்லாத உணவகங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மாவட்டத்தில் ஓட்டல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில சைவ, அசைவ உணவகங்களில் தரமில்லாத உணவை உண்பதால் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஏற்படுகிறது.
இறைச்சி கடைகள் பெருகி வருவதால் சுகாதாரம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. போதுமான ஆய்வு இல்லாததால் நோய் ஏற்படுத்தும் உணவு விற்பனையை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கவும், வாகன வசதி ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.