நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, : கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகர்கோயில் பொங்கல் விழா, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா நடந்தது.
இங்கு ஏப்.17ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அழகருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் செங்கப்படை கிராமத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 108 விளக்கு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை செங்கப்படை கிராம மக்கள் செய்தனர்.

