
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஆக. 9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவில் நேற்று இரவு 7:00 மணிக்கு மகளிர் மன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக ஆதிமுத்தன் குடியிருப்பு கிராமத்தினர் சார்பில், சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை உடலில் வர்ணம் பூசி, வீமன் வேடமிட்டு நகர்வலம் வந்தனர். கிராமத்தினர் சார்பில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

