/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடிகை கவுதமியிடம் நிலமோசடிவழக்கு செப். 4க்கு தள்ளிவைப்பு
/
நடிகை கவுதமியிடம் நிலமோசடிவழக்கு செப். 4க்கு தள்ளிவைப்பு
நடிகை கவுதமியிடம் நிலமோசடிவழக்கு செப். 4க்கு தள்ளிவைப்பு
நடிகை கவுதமியிடம் நிலமோசடிவழக்கு செப். 4க்கு தள்ளிவைப்பு
ADDED : ஆக 23, 2024 03:01 AM
ராமநாதபுரம்:நடிகை கவுதமியிடம் நிலம் வாங்கித்தருவதாக ரூ.3 கோடியே 16 லட்சம் மோசடி செய்ததாக சினிமா பைனான்சியர் அழகப்பன் மீதான வழக்கு விசாரணையை ராமநாதபுரம் நீதிமன்றம்செப்., 4 க்கு தள்ளிவைத்தது.
தன்னிடம் பழகிய காரைக்குடியை சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன் நிலம் வாங்கித்தருவதாக ரூ.3 கோடியே 16 லட்சம் மோசடி செய்ததாக நடிகை கவுதமி, ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷிடம் புகார் செய்தார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் அழகப்பன் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சமீபத்தில் அழகப்பன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 2ல் நடக்கிறது. அழகப்பனுக்கு ஜாமின் வழங்க கூடாது என ஆட்சேபித்து கவுதமி மனு செய்திருந்தார்.
வேறு ஒரு நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலுார் சிறையில் இருந்த அழகப்பன் இந்த வழக்கு தொடர்பாக நேற்றுமுன்தினம் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாஜிஸ்திரேட் பிரபாகரன் அனுமதியளித்தார். விசாரணை முடிந்து நேற்று மாலை மீண்டும் இந்நீதிமன்றத்தில் அழகப்பனை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை செப்., 4 க்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

