/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டைப்ரைட்டிங் தேர்வில் ஏராளமானோர் பங்கேற்பு
/
டைப்ரைட்டிங் தேர்வில் ஏராளமானோர் பங்கேற்பு
ADDED : செப் 01, 2024 11:45 PM

கீழக்கரை: -அரசு டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆக.31, செப்.1ல் (இன்று) ராமநாதபுரம் மையம் சார்பில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கிறது. கீழக்கரை, பரமக்குடி ஆகிய இடங்களில் 5000 பேர் கலந்து கொண்டனர்.
டைப்ரைட்டிங் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவில் நேற்று இளநிலை மூன்று தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும், இன்று இளநிலை இரண்டு தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும் மற்றும் உயர் வேக தேர்வுகள் இரண்டு தொகுதிகளாகவும் நடக்கிறது.
தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகத்தில் 6 மாதம் பயிற்சி பெற்றுள்ளனர்.
தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள் எடுத்தாலே தகுதி பெறுகின்றனர்.
ராமநாதபுரம் மையத்தில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத், முதன்மை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க நிர்வாகிகளான சரவணபவா, முருகபூபதி, குஞ்சரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.