/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உலக நீதி தினத்தையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம்
/
உலக நீதி தினத்தையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 16, 2024 11:53 PM
பரமக்குடி : பரமக்குடி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் இன்று (ஜூலை 17) உலக நீதி தினத்தையொட்டி நேற்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பரமக்குடி அருகே பெருங்கரை கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் வக்கீல் ராஜ்குமார் கிராம பெண்களிடம் பேசினார். அப்போது ஏழை மக்கள் சட்டம் குறித்து அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் உதவிகள் தேவைப்படும் போது சட்டப் பணி குழுக்களை தொடர்பு கொண்டு தீர்வு கிடைக்க அணுகலாம் என்றார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு அறிவுறுத்தலின்படி பரமக்குடி வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சதீஷ் ஆணைக்கிணங்க நடந்தது.