ADDED : பிப் 27, 2025 01:39 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கடந்த வாரம் கிலோ ரூ.50க்கு விற்ற எலுமிச்சை மகா சிவராத்திரி விழாக்கால தேவை மற்றும் வரத்து குறைவால் தற்போது இருமடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.100க்கு விற்கிறது.
இம் மாவட்டத்தில் குறைந்த அளவே காய்கறி, பழங்கள் சாகுபடி செய்வதால் இங்கு பிற மாவட்டங்களை விட விலை சற்று கூடுதலாக உள்ளது. மகா சிவராத்திரி விழா நேற்று(பிப்.26) துவங்கி ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படுகிறது. இதனால் காய்கறி, பழங்கள் தேவை அதிகரித்துள்ளது. கோயில்களில் எலுமிச்சை மாலை உள்ளிட்டவற்றுக்கும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ராமநாதபுரத்தில் எலுமிச்சை பழம் கடந்த வாரம் கிலோ ரூ.50க்கு விற்றது. இந்த வாரம் வரத்து குறைந்து கிலோ ரூ.100க்கு விற்கிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவது, பிப்.28 முதல் ரம்ஜான் நோன்பு துவக்கம் ஆகிய காரணங்களால் இதன் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கூறினர்.

