
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: தொண்டி அருகே காரங்காடு புனித செங்கோல் மாதா சர்ச்சில் தவக்கால சிறப்பு தியானம் நடந்தது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையபட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இயேசுவை தியானிப்பார்கள். காரங்காடு புனித செங்கோல் மாதா சர்ச்சில் சிறப்பு தியானம் நடந்தது. பாதிரியார் அருள்ஜீவா தலைமை வகித்தார். ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.