/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த மீன் மார்க்கெட்டில் மது விற்பனை ஜரூர்
/
சேதமடைந்த மீன் மார்க்கெட்டில் மது விற்பனை ஜரூர்
ADDED : செப் 09, 2024 05:15 AM
கீழக்கரை ; கீழக்கரை நகராட்சி பஸ்ஸ்டாண்ட் பின்புறம் பயன்பாடற்ற சேதமடைந்த மீன் மார்க்கெட்டில் மது விற்பனை ஜரூராக நடக்கிறது.
இங்கு செயல்பட்ட மீன் மார்க்கெட் ஆறு மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டு பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் தனியாக செயல்பட்டு வருகிறது. சேதமடைந்த மீன் மார்க்கெட் வளாகப் பகுதிகளில் காலை முதல் இரவு வரை மதுப் பிரியர்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
கடந்த 2019ல் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நிலையில் தொடர் போராட்டம் விளைவாக இரண்டு டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டது.
கீழக்கரை நகராட்சி பகுதிகளில் டாஸ்மாக் கடை இல்லாத நிலையில் சட்ட விரோதமாக அதிகளவில் மது விற்பனை செய்வோர்களால் எல்லா நேரமும் மது விற்பனை நடக்கிறது.
கீழக்கரை பஸ் ஸ்டாண்ட், சேதமடைந்த மீன் மார்க்கெட் மற்றும் கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை மற்றும் டோர் டெலிவரி நடக்கிறது.
அதற்கென உள்ள சங்கேத பாஸ்வேர்டுகள் மூலமாக மற்றும் அலைபேசி மூலம் தொடர்பு கொள்வோரால் அதிகளவு மது விற்பனை செய்யப்படுகிறது.
காலை மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தால் இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.
எனவே சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.