/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டம் நடத்த தயாராகும் உள்ளாட்சிகள்
/
லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டம் நடத்த தயாராகும் உள்ளாட்சிகள்
லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டம் நடத்த தயாராகும் உள்ளாட்சிகள்
லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டம் நடத்த தயாராகும் உள்ளாட்சிகள்
ADDED : ஜூன் 19, 2024 04:58 AM
கடலாடி: -லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மன்ற கூட்டங்கள் நடத்துவதற்கு துறை அலுவலர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டம், தார் ரோடு, கான்கிரீட் ரோடு, பேவர் பிளாக் பதித்தல், தடுப்பணைகள் அமைத்தல் மற்றும் சிறு பாலங்கள், பள்ளிக்கூடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூறியதாவது:
கடந்த 2020 முதல் வாரத்தில் பொறுப்பேற்ற பிறகு கவுன்சிலர்களுக்கு உரிய நிதி பெறப்பட்டு பணிகள் நடந்துள்ளன.
அதே வேளையில் முறையாக திட்டப் பணிகள் பகிர்ந்து அளிக்காத கவுன்சிலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பதவிக்காலம் முடிவதற்குள் ஓட்டு போட்ட மக்களுக்கு முழுமையாக பணிகளைச் செய்ய முடியவில்லை என்ற மன ஆதங்கம், குமுறல் உள்ளது.
பொதுவாக ஊராட்சிகளில் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு யூனியன் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை.
பதவிக் காலம் முடிந்த பிறகு மீண்டும் மக்களை சந்திக்க தயாரானாலும் முறையான திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் கானல் நீராகவே உள்ளது.
பெரும்பாலான மன்ற கூட்டங்கள் காட்சிப் பொருளாகவும், பெயரளவிற்கும் நடக்கின்றன.
ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த முறை தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என கூட்டம் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதே நேரம் முறையாக திட்டங்களை சரி செய்யும் தொலைநோக்கு பார்வை இல்லை.
இதனால் அதிகாரிகளை விட மக்களை சந்திக்கும் நாங்கள் தான் பிரச்சனைக்கு உள்ளாகிறோம். சமீபத்தில் நடந்து முடிந்த
லோக்சபா தேர்தலில் கொடுத்த அடிப்படைத் தேவைகளான வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர எம்.பி., முன் வர வேண்டும் என்றனர்.