ADDED : மார் 28, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் லோக்சபா தேர்தல் குறித்து பார்வையாளர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம் லோக்சபா தேர்தல் பார்வையாளர் பொது பண்டாரி யாதவ் தலைமை வகித்தார். போலீஸ் பார்வையாளர் சத்ய வீர் கட்டாரா, கலெக்டர் விஷ்ணுசந்திரன், எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தனர். தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை, ஓட்டுச்சாவடி மையங்களின் விபரம், தேர்தல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பார்வையாளர்கள் கேட்டறிந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோவன் பங்கேற்றனர்.