/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெளியூர் ஆட்டோ, வேன்களுக்கு தடை மண்டபம் ஓட்டுநர் சங்கம் வலியுறுத்தல்

ADDED : மே 28, 2024 05:34 AM

ராமநாதபுரம் : மண்டபம் ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்டில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்லும் வெளியூர், அனுமதி இல்லாத ஆட்டோ, வேன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் வலியுறுத்தினர்.
மண்டபம் சமத்துவம் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் தலைவர் செல்வம், செயலாளர் கணேஷ்பாபு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
மண்டபம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 40 ஆட்டோக்கள், ரயில் நிலையத்தில் இருந்து 60 ஆட்டோக்கள், 3 வேன்கள், 48 கார்கள் தினசரி பயணிகளை ஏற்றி இறக்கி விடுகின்றனர். இந்நிலையில் வெளியூரை சேர்ந்தவர்கள் மற்றும் அனுமதி இல்லாத ஆட்டோ, வேன்களில் டிக்கெட் போட்டு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால் மண்டபத்தில் அனுமதி பெற்ற ஆட்டோ, வேன் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே வெளியூர், அனுமதி இல்லாத ஆட்டோ, வேன்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.