
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே கடுக்கலுார் கிராமத்தை சேர்ந்தவர் பழனி 41. கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையினருடன் நடந்த மோதலில் பலியானார். அவரின் நினைவாக நேற்று சேது சீமை பட்டாளத்தினர் சார்பில் திருவாடானையில் மாரத்தான் போட்டி நடந்தது.
திருவாடானை தாலுகா அலுவலகத்திலிருந்து அச்சங்குடி வரை 2 கி.மீ. துாரம் நடந்த இப் போட்டியை டி.எஸ்.பி.நிரேஷ் துவக்கி வைத்தார். ஏராளமானோர் பங்கேற்றனர்.