/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை
/
பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை
பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை
பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து சேர்க்க நடவடிக்கை
ADDED : மே 14, 2024 12:01 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து போகலுார் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள் சேர்க்கைக்கு போகலுாரில் இயங்கி வரும் சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி நிர்வாகிமாடசாமி தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செம்மடம் அருகில் சாலையோரம் பல்வேறு பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தமக்கள் குடிசை அமைத்து நீண்ட காலமாக வாழ்ந்து வருவதாகமுதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவரது வழிகாட்டுதல் படிஅப்பகுதி மக்களை உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியர்கள் நேரில் சந்தித்து 20 குடும்பத்தினர்குழந்தைகளை தெருவில் விடாமல் குழந்தை தொழிலாளர்களாக மாற்றாமல் விழிப்புணர்வுஏற்படுத்தி பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உச்சிப்புளி எஸ்.எம்.காலனி, குறிஞ்சிநகர் பகுதியில் உள்ள மக்களை சந்தித்து உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள தமிழக அரசின் சலுகைள், உரிமைகள், வசதிகளையும், பள்ளியின் செயல்பாடுகளையும் எடுத்துரைத்து அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியர்கள் ராக்கு, புஷ்பவள்ளி, ஜெயசுதா, பூபதி, ராதாமணி, அன்னலட்சுமிஅனுசுயாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.

