/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
/
உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 08, 2025 03:30 AM
கமுதி : கமுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமிபட்டி, கே.எம்.கோட்டை கிராமத்தில் அ.தி.மு.க., பூத் கிளை அமைப்பது, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் கருமலையான் ஏற்பாட்டில் நடந்தது.
அமைப்புச் செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன், மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர்.வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் சேகரன்உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.