sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தில் குரூப்---4 தேர்விற்கான மாதிரி தேர்வுகள் 

/

தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தில் குரூப்---4 தேர்விற்கான மாதிரி தேர்வுகள் 

தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தில் குரூப்---4 தேர்விற்கான மாதிரி தேர்வுகள் 

தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தில் குரூப்---4 தேர்விற்கான மாதிரி தேர்வுகள் 


ADDED : பிப் 26, 2025 07:08 AM

Google News

ADDED : பிப் 26, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்-4 தேர்விற்கான மாதிரி தேர்வு மார்ச் 2 முதல் 30 வரை வாரத்தில் ஒருநாள் நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்--4 தேர்விற்கான தொகுதி- 4 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

இதில் முழு மாதிரி தேர்வுகள் மார்ச் 2, 9,16, 23, 30 ஆகிய நாட்களில் புதிய பாடதிட்டத்தின் படி காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.

இத்தேர்வு முடிந்தவுடன் நடப்பு நிகழ்வுகள், பொது தமிழ், பொது அறிவு குறித்த முக்கிய பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

மாவட்டத்தைச் சார்ந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 போட்டித் தேர்விற்கு தயார் செய்து வரும் இளைஞர்கள் முன்பதிவு செய்யலாம்.

இவர்கள் தங்களது புகைப்படம், சுய விபரங்களுடன் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ, 04567--230 160 என்ற தொலைபேசியில் அல்லது 73394 06320 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து மாதிரி தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us