/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
/
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 20, 2024 04:37 AM

அரோகரா கோஷம் எழுப்பிய பக்தர்கள்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 11:15 மணிக்கு நடந்தது. ஜூன் 17ல் விக்னேஷ்வர் பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று தீபாராதனை மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
மறுநாள் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
நேற்று காலை 7:15 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று காலை 9:15 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளுடன் மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் சந்திரசேகர் மற்றும் மணிகண்ட குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். காலை 11:15 மணிக்கு கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின் புனித நீரால் மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் பிச்சை குருக்கள், தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், மோர்ப்பண்ணை கிராம தலைவர் ராஜதுரை, முன்னாள் கிராம தலைவர் துரை.பாலன், கடலுார் ஊராட்சி தலைவர் முருகவள்ளி பாலன், துணைத் தலைவர் சேவியர், ஊராட்சி செயலாளர் ஆண்டனி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாக கமிட்டியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடர்ச்சியாக இன்று(ஜூன் 20) மதியம் 12:00 மணிக்கு பாய்மர படகுப் போட்டி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கிராம மீனவ பட்டங்கட்டியார்கள் செய்திருந்தனர்.