/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடைக்கல அன்னை சர்ச் கொடியேற்றம்
/
அடைக்கல அன்னை சர்ச் கொடியேற்றம்
ADDED : ஆக 08, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பூலாங்குடி அடைக்கல அன்னை சர்ச் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆலய பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
பூலாங்குடி அடைக்கல அன்னை சர்ச் அர்ச்சிப்பு விழா சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் நடந்தது. தொடர்ந்து ஆலயப் பெருவிழா கொடியேற்றப்பட்டது.
இரவில் செங்குடி பங்கு பாதிரியார் தினேஷ் கொடியேற்றி திருப்பலி நிகழ்த்தினார். ஆலய பெருவிழா மற்றும் தேர்பவனி விழா ஆக.14ல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.