
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஆனிமுத்து கருப்பர் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடந்தது.
நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அஞ்சுகோட்டை, வாணியேந்தல், பொட்டக்கோட்டை, சுப்பிரமணியபுரம், மேலவயல், கரையக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதன்பின் கண்மாய் நீரில் கரைக்கப்பட்டது.

