/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துமாரியம்மன் கோயில் ஆண்டு விழா
/
முத்துமாரியம்மன் கோயில் ஆண்டு விழா
ADDED : ஆக 28, 2024 04:20 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் 16ம் ஆண்டு விழா நடக்கிறது.
இக்கோயிலில் ஆக.20ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தமிழ்நாடு பூஜாரிகள் பேரவை மாநில துணைத் தலைவர் கோதாவரி, மண்டல அமைப்பாளர் முனியசாமி, ஞான சேவா சங்கத்தினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராம தலைவர் தேவராஜ், செயலாளர் தன்ராஜ் செய்தனர்.
திருவாடானை
கிழக்கு தெரு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

