/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய மக்கள் நீதிமன்றம் ரூ.8.47 கோடிக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றம் ரூ.8.47 கோடிக்கு தீர்வு
ADDED : மார் 09, 2025 05:04 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1295 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.8.47 கோடி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள்நீதிமன்றம் நடந்தது. இதில் பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி, திருவாடானை, ராமேஸ்வரம் உட்பட 10 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, வங்கி காசோலை மோசடி, வங்கி வராக்கடன் மற்றும் சிறு வழக்குகள் உட்பட 3842 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப்அலிகான் தலைமை வகித்தார். விரைவு மகிளா நீதிபதி கே.கவிதா, சார்பு நீதிபதி அகிலா தேவி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி எஸ்.பிரசாத், நீதித்துறை நடுவர் எண் 1 நடுவர் என்.நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர் எண் 2, நடுவர் பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கேத்திரினி ஜெபா சகுந்தலா, வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் மாதவன் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்காளர்கள் பங்கேற்றனர்.
இதில் 1295 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8 கோடியே 47 லட்சம் ரூபாய் வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.