போலந்தில் ஒத்திகையின் போது துயரம்: எப்-16 போர் விமானம் விபத்தில் சிக்கி விமானி பலி!
போலந்தில் ஒத்திகையின் போது துயரம்: எப்-16 போர் விமானம் விபத்தில் சிக்கி விமானி பலி!
UPDATED : ஆக 29, 2025 12:44 PM
ADDED : ஆக 29, 2025 10:31 AM

வார்சா: போலந்தில் விமானக் கண்காட்சி ஒத்திகையின் போது எப்-16 போர் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமானி உயிரிழந்தார்.
போலந்து ராணுவத்தில் அதிநவீன எப்-16 ரக போர் விமானங்களில் பயன்பாட்டில் உள்ளன. அந்நாட்டின் ரடோம் நகரில் விமான வான்சாகச நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. இந்ந நிகழ்ச்சியில் போர் விமானங்கள, சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என பல பங்கேற்றன.
இதற்கான ஒத்திகை பயிற்சி நடந்தது. அப்போது, திடீரென எப்-16 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து ஓடுபாதையை சேதப்படுத்தியதால், ஆகஸ்ட் 30-31ம் தேதிகளில் நடக்க இருந்த விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட போலந்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் வாடிசா கோசினியாக விமானிக்கு அஞ்சலி செலுத்தினார்.
விமானம் கீழே விழுந்து நொறுங்கிய பிறகு தீப்பற்றிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. எப் 16 விமானம் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது