ADDED : ஜூன் 27, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை அருகே புது மாயாகுளம் இயற்கை ஆர்வலர் ராமு கூறுகையில், கீழக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புள்ளி மான்கள் கூட்டமாக திரிகின்றன.
இரவு நேரங்களில் விளை நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் தேடி வரும் போது வெறி நாய்களிடம் கடிபட்டு உயிரிழக்கின்றன.
இவற்றை தடுக்க புள்ளி மான்கள் வசிக்கும் இடங்களில் பண்ணை குட்டைகளும், தண்ணீர் தொட்டி, தடாகம் ஏற்படுத்தினால் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வன உயிரினங்கள் வாழ வசதியாக இருக்கும். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.