ADDED : ஜூலை 25, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி : கடலாடி ராம்கோ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு 2000 டன் கொள்ளளவு கொண்ட இரண்டு கோடவுன்கள் உள்ளது. இவற்றின் முகப்பு பகுதியில் மட்டுமே காம்பவுண்ட் சுவர் உள்ளது. மற்ற மூன்று பகுதிகளிலும் காம்பவுண்ட் சுவர் இல்லாத நிலையில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது.
இந்த கோடவுனில் அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்பு கருதி கூட்டுறவு மொத்த பண்டகசாலைக்கு காம்பவுண்ட் சுவர் அமைக்க வேண்டும்.

