/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனையில் செயல்படாத ஜெனரேட்டர்
/
அரசு மருத்துவமனையில் செயல்படாத ஜெனரேட்டர்
ADDED : மே 07, 2024 11:15 PM

திருவாடானை : திருவாடானை அரசு மருத்துவமனையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஜெனரேட்டர் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டும் இயங்கிய நிலையில் பேட்டரி மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்காமல் போனது. தற்போது வெறும் காட்சி பொருளாக உள்ளது.
மின்தடை ஏற்படும் நேரங்களில் மருத்துவமனை இருளில் மூழ்கியுள்ளது. இது குறித்து நோயாளிகள் கூறுகையில், மருத்துவமனையில் முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லை. நோயாளிகள் டாக்டர்கள் பற்றாக்குறையால் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
துாய்மைப் பணியாளர்கள் இல்லாததால் சுகாதாரம் இல்லாமல் காணப்படுகிறது. ஜெனரேட்டர் செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. தாலுகா தலைமையிடமாக உள்ள இந்த மருத்துவமனையில் முழுமையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

