/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: மாவட்ட சத்துணவு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் மணிமொழி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். சத்துணவு ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஈமச்சடங்கு நிதியாக ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.