/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி கீழ பள்ளிவாசல் ரோடு முழுவதும் ஆக்கிரமிப்பு பஸ் ஸ்டாண்ட் செல்வோர் திணறல்

ADDED : மே 30, 2024 10:10 PM

பரமக்குடி- பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு பிரதான வழித்தடமாக உள்ள கீழ பள்ளி வாசல் ரோடு ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பில் உள்ளது.
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து நகருக்குள் செல்லும் முக்கிய ரோடாக கீழபள்ளி வாசல் தெரு உள்ளது. இதன் வழியாக எமனேஸ்வரம் பகுதி மக்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட வார்டுகளைச் சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர்.
இந்த ரோடு 15 அடி முதல் 25 அடி வரை அகலம் கொண்டதாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தெருவின் இருபுறங்களிலும் ஏராளமான வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் மஹால், தனியார் பள்ளி, மருத்துவமனைகள் என செயல்படுகிறது. இந்நிலையில் தெருக்களில் உள்ள வியாபாரிகள் ரோடு வரை சில இடங்களில் படிகளை அமைத்துள்ளனர்.
மேலும் மக்கள் பார்வையில் படும்படி பொருட்களை வரிசையாக தெருவில் அடுக்கி வைக்கின்றனர். இதற்கு மத்தியில் தெருவோர வியாபாரிகள் ஆங்காங்கே தள்ளு வண்டிகளை நிறுத்தி வைக்கின்றனர்.
இதனால் தெரு முழுவதும் சுருங்கி மக்கள் நடக்க வழியின்றி ஒற்றையடி பாதையாக மாறும் சூழல் உள்ளது. தொடர்ந்து டூவீலர், ஆட்டோ, பள்ளி வாகனங்கள் சென்றுவர முடியாமல் உள்ளதுடன் வாகனங்களும் நுழைய முடியாத நிலை உள்ளது.
ஆகவே தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை வணிக நிறுவனத்தினர் சரி செய்து கொள்வதுடன், நகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.