தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அதிகாரிகள் அலைக்கழிப்பு

அதிகாரிகள் அலைக்கழிப்பு

அதிகாரிகள் அலைக்கழிப்பு


ADDED : ஏப் 23, 2024 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 12:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : கமுதியை சேர்ந்த தாமரைக்கண்ணன் அவரது மாற்றுத்திறனாளி பேரனுக்கு உதவித்தொகை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதாக புகார் தெரிவித்துள்ளார்.

கமுதி அருகே மருதங்கநல்லுாரைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவரது மகள் வழி மாற்றுத்திறனாளி பேரன் சுபாஷ் 18,க்கு உதவித்தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

மன வளர்ச்சி குன்றிய எனது பேரனுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் 14 மாதங்களாக ராமநாதபுரம்மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கமுதி கிளையில் உதவித்தொகை வங்கி கணக்கில் வரவாகவில்லை. காரணம் கேட்டால் சொல்ல மறுக்கின்றனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உதவித்தொகை கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறோம்.கலெக்டர் விசாரணை செய்து விரைவில் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us