ADDED : மே 20, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி அருகே கருங்கவயல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு 83.
நேற்று முன்தினம் தினையத்துாருக்கு சென்று அங்கு வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது டூவீலர் மோதியதில் பலத்த காயமடைந்த வேலு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இறந்தார். தொண்டி போலீசார் டூவீலர் ஓட்டிச் சென்ற தேளூரை சேர்ந்த மனோகரனை 23, கைது செய்தனர்.

