நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சீனாங்குடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் 59. இவர் நேற்று முன்தினம் திருப்பாலைக்குடியில் நடைபெற்ற நண்பரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட பின் டூவீலரில் ஊர் திரும்பினார்.
கிழக்கு கடற்கரை சாலை வளமானுார் விலக்கு பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற டூவீலரில் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் பலியானார். திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் விசாரிக்கிறார்.