ADDED : ஜூன் 01, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் முன்பு பழைய கட்டடத்தின் பகுதிகள் உள்ளன. இதில் பழைய நீர் தேக்கத்தொட்டியும், இதன் அருகில் பாதாள சாக்கடை தொட்டிகள் திறந்த நிலையில் உள்ளன.
இதன் அருகே நோயாளிகள் செல்வதற்கான நடை பாதை, சமையல் கூடம், பழைய கட்டடத்தில் அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன.
இந்த இடத்தில் பாதாள சாக்கடை டேங்க் கழிவுகள் கொண்ட தொட்டிகளின் மூடிகள் திறந்து இருப்பதால் நோய் பரவும் நிலை உள்ளது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.