/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கேரளா உட் பர்னிச்சர் ராமநாதபுரத்தில் திறப்பு விழா
/
கேரளா உட் பர்னிச்சர் ராமநாதபுரத்தில் திறப்பு விழா
ADDED : ஏப் 01, 2024 10:04 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே கேரளா உட் பர்னிச்சர் திறப்பு விழா நடந்தது.
கேரளா உட் பர்னிச்சரின் நிறுவனர் ஜமைக்கான் சிஜே, பீனா ஜமைக்கான் தலைமை வகித்தனர். ராமநாதபுரம் கேரள உட் பர்னிச்சர் உரிமையாளர் அருண் சிஜே, மின்னி அருண் ஆகியோர் வரவேற்றனர். கீழக்கரை தொழிலதிபர் சதக் அப்துல்காதர், வசந்தா கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் எஸ்.ராஜேஸ்கண்ணா, புத்தேந்தல் ஊராட்சித் தலைவர் டி.கோபிநாத் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
வேதாளை செயின்ட் ஜோசப் மிஷன் சர்ச் பாதிரியார் மாத்யூ குழிஞ்சாலில், பாதிரியார் ஜோசப் கூவள்ளூர் சிறப்பு பிரார்த்தனை செய்து வியாபாரத்தை துவக்கி வைத்தனர். இங்கு பொதுமக்களுக்கு மரத்தால் ஆன கட்டில், ேஷாபா, டைனிங் டேபிள், டிரஸ்ஸிங் டேபிள், டீபாய்கள், மர பீரோக்கள். ஊஞ்சல்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தேக்கு மரம் உள்ளிட்ட தரமான மரங்களிலும் இந்த பர்னிச்சர்கள் செய்யப்பட்டிருந் திருந்தன. இதில் பொதுமக்கள் தள்ளுபடி விற்பனையில் பெற்றுச்சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கடையின் உரிமையாளர் அருண்சிஜே செய்திருந்தார்.

