/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் நீர் மோர் பந்தல் திறப்பு
/
கீழக்கரையில் நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 07, 2024 11:11 PM

கீழக்கரை : -கீழக்கரையில் கோடை காலத்தை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன் முன்னிலை வகித்தார். பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, ராமநாதபுரம் அசோக்குமார், முதுகுளத்துார் சங்கர பாண்டியன், ராம்கோ தலைவர் சுரேஷ், நகர் துணைத் செயலாளர் குமரன், சாயல்குடி ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அஜ்முல் ரகுமான், முனியசாமி, சி.கே.வேலன், ஐ.டி.விங் சிவராமலிங்கம் பங்கேற்றனர்
பொதுமக்களுக்கு தர்பூசணி, பப்பாளி, வெள்ளரிக்காய், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கோடை காலம் முடியும் வரை நீர்மோர் பந்தல் செயல்பட உள்ளதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். ஏற்பாடுகளை பாசறை தலைவர் செல்வகணேச பிரபு செய்திருந்தார்.

