தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போக்குவரத்திற்கு இடையூறாகும் கால்நடைகளை பிடிக்க உத்தரவு

போக்குவரத்திற்கு இடையூறாகும் கால்நடைகளை பிடிக்க உத்தரவு

போக்குவரத்திற்கு இடையூறாகும் கால்நடைகளை பிடிக்க உத்தரவு


ADDED : ஜூன் 23, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புல்லாணி: மண்டபம், திருப்புல்லாணி, கடலாடி, கமுதி உள்ளிட்ட யூனியன்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் சாலையில் சுற்றி திரியும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பிடிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி செயலர் ஒருவர் கூறியதாவது:

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி கிராம ஊராட்சிகளை கடந்து செல்லும் சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடு மற்றும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் கால்நடைகளை சாலைகளில் விட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இது போன்ற செயல்களில் தொடர்ந்து செயல்படும் கால்நடை உரிமையாளர்களிடம் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலமிடவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது குறித்த சுற்றறிக்கை ஒவ்வொரு ஊராட்சியிலும் வழங்கப்படுகிறது. சாலையோரங்களில் கால்நடைகள் மூலமாக ஏற்படக்கூடிய விபத்துக்கள் தவிர்க்கப்பட உள்ளது என்றனர்.

–––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us