ADDED : ஜூன் 23, 2026 04:51 PM
ராமநாதபுரம்: கருத்து உரிமையை பறிக்கின்ற டாஸ்மாக் நிர்வாகச் செயலை கண்டித்து சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சந்தானம் முன்னிலை வகித்தார். இதில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜான் அந்தோணி ராஜ் டாஸ்மார்க் நிர்வாக சீர்கேடுகள் குறித்து பேட்டியளித்ததற்காக அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்தச் செயல் தொழிற்சங்க உரிமையை பறிக்கும் செயல். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல். பணி இடை நீக்க உத்தரவை வாபஸ் பெற்று உடனடியாக பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்ராஜ், பொருளாளர் நம்புராஜன் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.–
