/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
யூனியன் திட்டப் பணிகளை முறையாக தாருங்கள்: குளறுபடிகள் வேண்டாமே கவுன்சில் கூட்டத்தில் காரசாரம்
/
யூனியன் திட்டப் பணிகளை முறையாக தாருங்கள்: குளறுபடிகள் வேண்டாமே கவுன்சில் கூட்டத்தில் காரசாரம்
யூனியன் திட்டப் பணிகளை முறையாக தாருங்கள்: குளறுபடிகள் வேண்டாமே கவுன்சில் கூட்டத்தில் காரசாரம்
யூனியன் திட்டப் பணிகளை முறையாக தாருங்கள்: குளறுபடிகள் வேண்டாமே கவுன்சில் கூட்டத்தில் காரசாரம்
ADDED : ஆக 28, 2024 04:16 AM
திருப்புல்லாணி, ஊராட்சி ஒன்றிய திட்டப்பணிகளை குளறுபடிகள் இன்றி முறையாக தாருங்கள் என்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமாக பேசினர்.
ஒன்றிய கவுன்சில் கூட்டம் நேற்று காலை நடந்தது. தலைவர் புல்லாணி தலைமை வகித்தார். துணை தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.
பி.டி.ஓ.,க்கள் கோட்டை இளங்கோவன், கமிஷனர் ராஜேஸ்வரி உட்பட ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கணக்காளர் லதா தீர்மானங்களை வாசித்தார்.
துணைத்தலைவர் சிவலிங்கம்: மாயாகுளம் ஊராட்சியில் குப்பை சரிவர அள்ளப்படாததால் காய்ச்சலுக்கு வழி ஏற்படுகிறது. ஊராட்சியில் வசூலிக்கப்படும் வீட்டு வரி ரசீதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகிறது. அதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே வீட்டு வரி ரசீது கட்டியவர்களிடம் மறுபடியும் செலுத்தக் கூறி நிர்பந்தம் செய்கின்றனர். எனவே கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட ரசீது வழங்க வேண்டும். திருப்புல்லாணி யூனியன் திட்ட நிதியை யூனியன் அலுவலர்கள் முறையாக மக்கள் பிரதிநிதிகளுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும். அதை விடுத்து நோக்கத்திற்கு வழங்குவதால் பல்வேறு குளறுபடிகளுக்கு வழி ஏற்படுகிறது.
கவுன்சிலர் பைரோஸ்கான்: பெரியபட்டினம் தங்கையா நகரில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி கட்டடத்தை காலி செய்ய கூறுகின்றனர். எனவே புதிய அங்கன்வாடி கட்டடம் தேவை. பெரியபட்டினத்தில் உள்ள பழமை வாய்ந்த கப்பலாறு, சாலையூரணியை மழைக்காலத்திற்கு முன் துார்வாரினால் மழைநீர் சேகரிப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும்.
11 ஆழ்துளை கிணறுகள் பெரியபட்டினம் ஊராட்சியில் உள்ளன. அவற்றில் நான்கு பெரியபட்டினத்திற்கு பயன் தருகிறது. நையினாமரைக்கான், பத்திராதரவை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு இங்கு இருந்து தான் குடிநீர் செல்கிறது. எனவே நிலத்தடி நீரை தக்க வைக்க உரிய முறையில் துார்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றார்.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

