/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடு: பார்வையாளர்கள் ஆய்வு
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடு: பார்வையாளர்கள் ஆய்வு
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடு: பார்வையாளர்கள் ஆய்வு
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடு: பார்வையாளர்கள் ஆய்வு
ADDED : மார் 28, 2024 10:54 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமான புல்லங்குடி அண்ணா பொறியியல் கல்லுாரியில் மத்திய பொது தேர்தல் பார்வையாளர்கள் பண்டாரி யாதவ், காவல்துறை பார்வையாளர் சத்ய வீர் கட்டாரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் அருகே புல்லங்குடி அண்ணா பொறியியல் கல்லுாரியில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது.லோக்சபா தொகுதிகளில்அறந்தாங்கி, பரமக்குடி (தனி), ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்துார், திருச்சுழி ஆகிய சட்டசபை பகுதிகளில் இருந்து பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது.
தேர்தல் பார்வையாளர்கள் பண்டாரி யாதவ்(பொது), காவல்துறை சத்யவீர் கட்டாரா (பொது) ஆகியோர் கல்லுாரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறை, ஓட்டு எண்ணும் அறை மற்றும் தபால் ஓட்டு எண்ணும் அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். கலெக்டர் விஷ்ணுசந்திரன், கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் பங்கேற்றனர்.

