/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காம்பவுண்டுக்கு தயாராகும் பனை வேலி மட்டைகள்
/
காம்பவுண்டுக்கு தயாராகும் பனை வேலி மட்டைகள்
ADDED : ஜூலை 31, 2024 04:46 AM

ரெகுநாதபுரம், -பனை ஓலை மட்டையில் இருந்து கிடைக்கும் வேலி மட்டைகள் அதிகளவு பாதுகாப்பு வேலி சுவராக பயன்படுகிறது.
ரெகுநாதபுரம் பத்திராதரவை, நையினாமரைக்கான், வண்ணாங்குண்டு, கொல்லந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. 100 பனை ஓலை மட்டை ரூ. 400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும் பாலானோர் தென்னந்தோப்புகளில் பாதுகாப்பு வேலிக்காக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கால சூழ்நிலையால் வேலி மட்டைகளுக்கு பதிலாக கம்பி வேலி மற்றும் பிளாஸ்டிக் நைலான் வலைகளை பயன்படுத்துகின்றனர். வேலி மட்டை வியாபாரி முனியம்மாள் கூறியதாவது:
பனை மரத்தில் இருந்து வெட்டக்கூடிய மட்டை ஓலை தவிர்த்து கிடைக்க கூடியது மட்டையாக பயன்படுகிறது. முன்பு குறைவான விலையில் விற்கப்பட்ட வேலிமட்டை தற்போது பனை மரத்தில் ஏறி வெட்டுவதற்கு கூலி உயர்வால் அதன் விலையும் உயர்ந்துள்ளது.
பெரும் பாலானோர் வேலி மட்டையை வாங்கி கரையான் அரிப்பதை தடுக்க அதன் மீது கருப்பு தார் பூசி பயன் படுத்துகின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் இதன் பயன்பாடு இருக்கிறது. இவற்றின் மகத்துவம் அறிந்தவர்கள் கேட்டு வாங்கி செல்கின்றனர் என்றார்.