/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனைக்குளம் முஸ்லிம் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
/
பனைக்குளம் முஸ்லிம் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
பனைக்குளம் முஸ்லிம் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
பனைக்குளம் முஸ்லிம் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஏப் 28, 2024 06:09 AM

தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே பனைக்குளம் ஐக்கிய முஸ்லிம் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது.
செயலாளர் தவுலத் பாக்கீர், உதவி தலைவர் அலாவுதீன், பொருளாளர் பலீல் அகமது முன்னிலை வகித்தனர்.
முஸ்லிம் சங்கத்தின் புதிய தலைவராக சாகுல் ஹமீது, துணைத் தலைவராக இத்ரீஸ் அகமது, செயலாளராக ஆசிக் கனி, துணை செயலாளராக சபீக்குர் ரஹ்மான், பொருளாளராக ஜாக்கீர் அலி ஆகியோர் பதவியேற்றனர்.
மேலும் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளும் பதவியேற்றனர்.
பரிபாலன் சபைத் தலைவர் அப்துல் வகாப், புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஏற்பாடுகளை பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.