/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சித் தலைவர்கள் மக்கள் தேவையறிந்து செயல்பட வேண்டும்: கலெக்டர் அறிவுரை

ADDED : ஜூலை 05, 2024 10:37 PM
பரமக்குடி : கிராம மக்களின் அடிப்படை தேவைககளை அறிந்து ஊராட்சித் தலைவர்கள் செயல்பட வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்களுக்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடந்தது. பரமக்குடி தாசில்தார் சாந்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா வரவேற்றார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும். நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத ஊர்களில் காவிரி கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், கால்வாய் மராமத்து, அங்கன்வாடி கட்டடம், மயானங்கள் கட்டும் பணி நிதி ஒதுக்கி பணி செய்ய வேண்டும். மக்களின் தேவைகள் அறிந்து ஊராட்சித் தலைவர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
இதில் ஊராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். பி.டி.ஓ., தேவபிரியதர்ஷினி நன்றி கூறினார்.