ADDED : மார் 13, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்க மாவட்ட தலைவர்முருகன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சிதுறை பணியாளர்கள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் முத்துமாரி முன் னிலை வகித்தார். முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்டச்செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர்சிவசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.