/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நாளை கிராமிய கச்சேரியுடன் நிறைவு

ADDED : ஆக 17, 2024 12:21 AM

பரமக்குடி : பரமக்குடி மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துவங்கிய 2ம் ஆண்டு புத்தகத் திருவிழா நாளை நிறைவடைகிறது.
தனியார் அமைப்பினரால் நடத்தப்படும் நம்ம ஊரு புத்தகத் திருவிழா 2-வது ஆண்டாக ஆக.9ல் துவங்கியது. பரமக்குடி சந்தைக்கடை டி.டி.எஸ்., மஹாலில் தினமும் மாலை பல்வேறு பேச்சாளர்கள், திரைப்பட பிரபலங்கள் உரை நிகழ்த்தி வருகின்றனர்.
பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், செஸ் விளையாட்டு, புகையில்லா சமையல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்படுகிறது. மேலும் காலை, மாலை பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தினமும் இலவச கண் சிகிச்சை முகாம், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. மக்கள் நுாலகம் மூலம் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உண்டியல் மூலம் சேகரித்த தொகையை வைத்து மாணவர்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் சமூக ஆர்வலர்கள் கிராமங்களில் உள்ள பள்ளி மற்றும் நுாலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்கி பரிசளித்தனர். இன்று கவிஞர் அறிவுமதி பங்கேற்க உள்ள நிலையில் நாளை இரவு கிராமிய கச்சேரியுடன் விழா நிறைவடைகிறது.