/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் துணை ராணுவ படையினர் அணி வகுப்பு
/
பரமக்குடியில் துணை ராணுவ படையினர் அணி வகுப்பு
ADDED : மார் 23, 2024 05:34 AM

பரமக்குடி: -ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் பரமக்குடி (தனி) தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் அணிவகுப்பு நடந்தது.
வரும் ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், பரமக்குடி (தனி) தொகுதியில் 17 இடங்களில் 29 ஓட்டு சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் வாக்களிக்கும் வகையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இதன்படி பரமக்குடியில் 58 துணை ராணுவ படை வீரர்கள், போலீசார் உட்பட டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையில் 100 பேர் இதில் பங்கேற்றனர். பரமக்குடி திருவரங்கம் விலக்கு ரோட்டில் துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட், ஆர்ச், ஐந்து முனை ரோடு வழியாக ஓட்டப் பாலத்தில் நிறைவடைந்தது.
இதே போல் எமனேஸ்வரம் பகுதி நயினார்கோவில் ரோட்டில் அணிவகுப்பு நடந்தது.

