/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூப்பாண்டியபுரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் மறுப்பு

ADDED : மார் 31, 2024 03:54 AM
சாயல்குடி, : சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரம் கிராமத்தில் தனியார் கிரஷர், தார் மிக்ஸிங் ஆலையில் வரும் புகை மற்றும் துாசியால் பூப்பாண்டியபுரம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் தார் சாலை அமைப்பதற்காக பல மாதங்களாக ஜல்லி மற்றும் தார் கலவையின் போது ஏற்படும் புகையால் பூப்பாண்டியபுரம் கிராம மக்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் மூச்சுத்திணறல், அலர்ஜி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பூப்பாண்டியபுரம் கிராம மக்கள் கூறியதாவது:
ஆலையை சுற்றிலும் கரும்புகை எழுகிறது. இதனை சுவாசிக்கும் அனைவருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. காற்றுடன் கரும்புகையால் தொடர் மாசு ஏற்படுகிறது.
இதனால் அருகில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் பள்ளிக்கு அனுப்பவில்லை.
இதையடுத்து கடலாடி தாசில்தார் ரெங்கராஜ், வட்டார கல்வி அலுவலர் ருக்மணி தேவி, சாயல்குடி இன்ஸ்பெக்டர் முகம்மது இர்ஷாத் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தாசில்தார் ரங்கராஜ் கூறுகையில், பொதுமக்களிடம் வந்த புகாரால் ஆலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இது குறித்து கலெக்டருக்கு தெரிவித்துள்ளோம் என்றார்.