/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடுநிலைப்பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்த பெற்றோர் கோரிக்கை
/
நடுநிலைப்பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்த பெற்றோர் கோரிக்கை
நடுநிலைப்பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்த பெற்றோர் கோரிக்கை
நடுநிலைப்பள்ளியை உயர்நிலையாக தரம் உயர்த்த பெற்றோர் கோரிக்கை
ADDED : ஏப் 10, 2024 05:59 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம்வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியைஉயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனபெற்றோர் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே நகராட்சிகட்டுப்பாட்டில் வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளிசெயல்படுகிறது.
இங்கு எட்டாம் வகுப்பு வரை படிக்கும்மாணவிகள் அருகேயுள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.
அதே சமயம் மாணவர்களுக்கு அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளியின்றி நகரை விட்டுகிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலைஉள்ளது.
இது தொடர்பாக பெற்றோர் பலமுறை மாவட்ட கல்வி அலுவலகம், கலெக்டர் அலுவலகம், எம்.எல்.ஏ., வரைகோரிக்கை விடுத்தும் இதுவரை பள்ளியை தரம் உயர்த்தவில்லை.
தற்போது பள்ளி வளாகத்தில் புதிதாக வகுப்பறைகள்கட்டும் பணி நடக்கிறது. எனவே வரும் கல்வி ஆண்டிலாவதுவள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியைஉயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.

