/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டில் வசதிகளின்றி கண்டபடி நிறுத்தப்படும் பஸ்களால் பயணிகள் பாதிப்பு

ADDED : மே 23, 2024 03:11 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள், பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதியில்லாததால் பஸ்களை ஒதுக்கிய இடத்தில் நிறுத்தாமல் தினம் ஒரு இடத்தில் நிறுத்துவதால் தங்களது ஊர் பஸ்களை தேடி கண்டுபிடிக்க பயணிகள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி நடப்பதால் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்கப்படுகின்றன. இங்கு வெளியூர் பஸ்கள் வருவதற்கு ஏற்ப இடவசதி இல்லை. இதனால் மதுரை, ராமேஸ்வரம், சிவகங்கை என தனித்தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் பஸ்களை நிறுத்த முடியவில்லை.
எங்கு இடம் உள்ளதோ அங்கே பஸ்சை நிறுத்துகின்றனர். இதனால் பயணிகள் தங்களது ஊர் பஸ்சை தேடி அலைய வேண்டியுள்ளது. சில ஆட்டோக்கள், டூவீலர்கள் அத்துமீறி உள்ளே வருகின்றனர். இதனால் பஸ்களை நிறுத்தும் போதும், புறப்படும் போதும் காலதாமதம், இடையூறு ஏற்படுகிறது. ஆகையால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ்கள் மட்டும் வந்து செல்ல வேண்டும்.
ஒதுக்கிய இடங்களில் வெளியூர் பஸ்களை நிறுத்தும் வகையில் அதற்குரிய வசதிகளை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.