/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாரிவேட்டை விழாவையொட்டி சாயல்குடி வனத்தில் ரோந்து
/
பாரிவேட்டை விழாவையொட்டி சாயல்குடி வனத்தில் ரோந்து
ADDED : பிப் 28, 2025 06:58 AM
சாயல்குடி: பாரிவேட்டை விழாவை முன்னிட்டு சாயல்குடி, கடலாடி, கோவிலாங்குளம் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் கண்மாய், கடற்கரையோர பகுதிகளில் வனச்சரக அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
பொதுவாக பாரிவேட்டை உற்ஸவத்தில் முந்தைய காலங்களில் வனங்கள் மற்றும் காடுகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை பிடித்து அவற்றை பலியிடும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் அவை மறைந்து இருந்தாலும் ஒரு சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வன உயிரினங்களை வேட்டையாடும் செயல் அரங்கேறி வருகிறது.
இவற்றை தடுக்க விசேஷ காலங்களில் 5 நாட்களுக்கு சாயல்குடி வனச்சரக அலுவலகத்தினர் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், கண்மாய் கரையோரம் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களை தேர்வு செய்து அரிய வகை உயிரினங்களை வேட்டையாடுவோர் மீது அபராதமும், தண்டனையும் பெற்று தருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.

