ADDED : ஆக 07, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் முகமது சீது, முனிசாமி, ஜேம்ஸ்ராஜ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்கு பின் நிலுவையில் உள்ள செலவுத்தொகையை வழங்க வேண்டும். மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் காசில்லா மருத்துவம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியர் செலவுத்தொகை கோரி அனுப்பும் விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.