/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் கூட்டமாக வரும் தெரு நாய்களால் மக்கள் அச்சம்
/
முதுகுளத்துாரில் கூட்டமாக வரும் தெரு நாய்களால் மக்கள் அச்சம்
முதுகுளத்துாரில் கூட்டமாக வரும் தெரு நாய்களால் மக்கள் அச்சம்
முதுகுளத்துாரில் கூட்டமாக வரும் தெரு நாய்களால் மக்கள் அச்சம்
ADDED : செப் 13, 2024 05:06 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பஜார், வடக்கூர், கீழ ரதவீதி, கிழக்குத் தெரு, கடலாடி ரோடு, அலியார் தெரு, முகமதியார் வடக்குத் தெரு, பள்ளிவாசல் தெரு, அய்யனார் கோவில் தெரு, சுவாமிகள் மடத்து தெரு உட்பட பல்வேறு தெருக்களில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக உலா வருகின்றன.
இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். ரோட்டில் உலாவரும் நாய்களால் டூவீலர் விபத்து ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள் ஒருவித அச்சத்துடன் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை நாய்கள் கடிக்கின்றன.
பொதுமக்கள் கூறியதாவது: முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் நாய்கள் கூட்டமாக உலா வருகின்றன. மாணவர்கள் ஒருவித அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தான் பேரூராட்சி சார்பில் நாய்கள் பிடிக்கப்பட்டது. மீண்டும் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
வெளிப்பகுதியில் பிடிக்கப்படும் நாய்களை முதுகுளத்துார் பகுதியில் அவிழ்த்து விடப்படுவதால் ஏராளமான நாய்கள் உலா வரும் நிலை உள்ளது. எனவே பேரூராட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து தெருநாய்களை பிடித்தும், வெளிப் பகுதியில் இருந்து விடப்படும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.